எனது நூல்கள்

எனது நூல்கள்
எனது நூல்கள்

செவ்வாய், 26 மார்ச், 2013

ஈரோடு வலம்புரி விநாயகர் கோயிலில் கோலங்கள். KOLAMS AT ERODE VALAMPURI VINAYAGAR TEMPLE

””ங்கா ” புத்தகத்தை தாமோதரன் அண்ணன் பையன் அருணின் திருமணத்தில் வெளியிட்டார்கள்.

அதற்கு முன் சகோ ராஜ் சிவா சுந்தருடன் அவரின் வீட்டருகில் இருந்த வலம்புரி விநாயகர் கோயிலுக்குச் சென்று புத்தகத்தை வைத்து வணங்கி வந்தோம்.

அப்போது அங்கே எடுத்த கோலங்கள் இவை.

நல்ல பளிச்சென்று அழகான பெயிண்ட்டிங்கில் மனதைக் கொள்ளை கொண்டன.

பொடிக்கோல அச்சுகள். PODI KOLA MOULDS & SIEVES

பொடிக் கோலம் போட பிள்ளையார்பட்டி சென்றிருந்தபோது இந்த அச்சுக்களைப் பார்த்தேன். மிக அழகாக சல்லடையில் ஓட்டை போட்டு இருந்தது. அதன்வழியே கோலம் டிசைன் டிசைனாக விழுந்தது.

ஸ்வஸ்திக் மற்றும் ஸ்டார் அச்சுக்கள்.

அலங்காரப் பூக்கள். DECORATED FLOWER POT

இது தாமோதரன் அண்ணன் மகன் அருண்  திருமணத்தில் அலங்காரமாக வைக்கப்பட்டிருந்த பூக்கள்.

இவை அம்மா வீட்டில் கார்த்திகைப் பூசையில் வைக்கப்பட்டிருந்த பூக்கள்.

பூக்கள் என்றைக்குமே கொள்ளை அழகுதானே.. பூக்களின் கோலம்.

பொடிக்கோலம். 1 PODI KOLAM

இது எளிமையான பொடிக்கோலம். வாசலை அழகாக்கும் நிமிடங்களில்

திங்கள், 25 மார்ச், 2013

ஜப்பானியக் கூரைக் கோலம். JAPANESE ROOF KOLAM

ஜப்பான் வீடுகளில் கூரை டிசைனில் வருவதால் இந்தப் பெயர்.

இது 17 - 6 வரை , இடைப்புள்ளி வைத்துப் போடணும்,

நெளிக் கோலத்துள் பூக்கள். FLOWERS IN NELI KOLAM

நெளிக்கோலத்துள் பூக்கள்  10 புள்ளி 10 வரிசை.

நேர்ப்புள்ளி நெளிக்கோலங்கள் . 5 NELI KOLAM

நேர்ப்புள்ளியில் நெளிக்கோலங்களில் இது ஐந்தாவது கோலம். இது 18 புள்ளி 18 வரிசை.

நேர்ப்புள்ளி நெளிக்கோலங்கள் - 4 NELI KOLAM

நேர்ப்புள்ளி நெளிக்கோலங்கள் போடுவது  எளிது.

23 - 1 நேர்ப்புள்ளி வைத்து மையத்திலிருந்து நாலுபக்கமும் போட்டுக்கொண்டே வர வேண்டியதுதான்.

அல்லியும், தாமரையும், பட்டாம்பூச்சிகளும் LILLY, LOTUS , BUTTERFLY KOLAM

குளத்தில் மலர்ந்திருக்கும் அல்லியும் தாமரையும் அதன் மேல் வட்டமிடும் பட்டாம் பூச்சிகளும்..

நேர்ப்புள்ளி 12 புள்ளி 12 வரிசை. வரைய வரைய பட்டாம் பூச்சிகள் பறக்கத் துவங்கும். தாமரை மலரத் துவங்கும் .அல்லி தலையசைக்கும். :)

இடைப் புள்ளியில் முக்கோணக் கோலம். TRIANGLE KOLAM

15 இல் இருந்து 1 வரை புள்ளிகள் வைத்து முக்கோணம் முக்கோணமா இணைக்க வேண்டியதுதான். ரொம்ப ஈசி கோலம் இது.

வாத்துக் கோலம். DUCK KOLAM

இந்த வாத்துக் கோலம் நேர்ப்புள்ளி  19- 1. மிக எளிமையான கோலம் இது. கீழே தாமரை போல வரைந்து மேலே வாத்தை வரைய வேண்டியதுதான்.

வியாழன், 21 மார்ச், 2013

மாத்தூர்க் கோயிலில் கோலங்கள் KOLAMS AT MATHUR TEMPLE

மாத்தூரில் கலர் பெயிண்டில் நடுவீட்டுக் கோலமும் நடுவில் சிவ சிவ என்றும் எழுதப்பட்டிருந்தது..

இன்னொரு இடத்தில் ஜோடி மயிலும் வரையப்பட்டிருந்தது


திருநெல்லையம்மன் மண்டபத்தில் கோலங்கள்.THIRUNELLAIYAMMAN MANDAPA KOLAM

காரைக்குடியில் விஜயதசமியன்று திருநெல்லையம்மன் திருக்கோயிலூரிலிருந்து அம்பு போடுவதற்காக இந்த மண்டபத்திலிருந்து எழுந்தருள்வார்.

அதற்குமுன் அங்கே மக்கள் மாவிளக்குப் போடுவார்கள். அந்த மண்டபத்தில் போடப்பட்டிருந்த கோலம் இது.

குன்றக்குடியில் கோலம் KOLAM IN KUNDRAKKUDI.குன்றக்குடியின் நுழைவாயிலில் இந்தக் கோலத்தைப் பார்த்தேன்.கிட்டத்தட்ட படிக்கோலம் அமைப்பில் இருந்தது. 

ஞான சரஸ்வதி கோயிலில் கோலம். KOLAM AT GNANA SARASWATHI TEMPLE

இது காரைக்குடி பிள்ளையார்பட்டி சாலையில் குன்றக்குடி பிள்ளையார்பட்டிக்கு நடுவில் அமைந்துள்ளது.. இங்கே பக்கத்தில் குபேரன் கோயிலும் இருக்கிறது. ஒரே சமயத்தில் பிள்ளையார் லெக்ஷ்மி சரஸ்வதி முருகன் அனைவரையும் வணங்கி வரலாம்.

காரைக்குடி முனியையா கோயிலில் கோலங்கள்.KOLAMS AT MUNIYAIYA TEMPLE

காரைக்குடி முனியையா கோயிலில் இந்தக் கோலங்கள் போடப்பட்டிருந்தன.

தேங்காய் மூடியில் விளக்கு வைக்கும் பலகையிலும் கோலம் போடப்பட்டிருந்தது.

கார்த்திகைப் பூசைக் கோலமும் படிக்கோலமும் KARTHIGAI POOSAI KOLAM

கார்த்திகை மாதம் தண்டாயுதபாணி பூசையில்  சாமி வைக்கும் பலகையில் வேலும் மயிலும் வரைவார்கள்.

மாவிளக்கு வைத்து பள்ளயம் போடப்படும் இடத்தில் போட்ட கோலம் இது.வாசல் படியில் போடப்படும் கோலம் இது.

ஊனையூர் கோயிலில் கோலங்கள் KOLAMS AT OONAIYUR TEMPLE

ஊனையூர் கோயிலில் தரையில் கோலங்கள் போடப்பட்டிருந்தன. சிமெண்டில் தாமரை போடப்பட்டிருந்தது.

மேலும் பட்டியக்கல்லில் ஆடுபுலி ஆட்டமும் தாயக்கட்டமும் வரையப்பட்டிருந்தது.

சிவன் ராத்திரிக்கு வண்டி கட்டி வரும் மக்கள் இங்கேயே இரவு தங்குவதால் அவர்கள் விளையாட செதுக்கப்பட்டிருக்கலாம். எனவே இவற்றைப் புகைப்படம் எடுத்து வந்தேன்.

புதன், 20 மார்ச், 2013

அன்ன பக்ஷி கிளிக் கோலங்கள் SWAN, PARROT KOLAM

பொங்கல்பானைக் கோலம். அன்னபக்ஷி , கிளி ஆகிய கோலத்தில்

பொங்கல் பானை நேர்ப்புள்ளி 13 -3 வரை.

அன்ன பக்ஷி  நேர்ப்புள்ளி 20 - 2 வரிசை, 2 வரை.

கிளி இடைப்புள்ளி 17 முதல் 9 வரை.

இது குமுதம் பக்தி ஸ்பெஷலில் ஜனவரி 1 - 15 , 2013 இதழில் வெளிவந்தது.
Related Posts Plugin for WordPress, Blogger...