எனது நூல்கள்

எனது நூல்கள்
எனது நூல்கள்

புதன், 24 ஏப்ரல், 2013

திராக்ஷைக் கொத்தும் குழந்தைகளும். GRAPES KOLAM

குழந்தைகளுக்கு திராக்ஷை ரொம்பப் பிடிக்கும்..

அவர்களின் கண்கள் திராக்ஷைபோல மின்னுவதும் பிடிக்கும். எனவே இந்த திராக்ஷைக் கொத்தில் குழந்தைகளும்.

நேர்ப்புள்ளி 12 புள்ளி 12 வரிசை.

முக்கோணமும் தாமரையும். TRIANGLE LOTUS KOLAM

இது ரங்கோலிக்காகப் போட்ட டிசைன்.


ஞாயிறு, 21 ஏப்ரல், 2013

ருத்ராக்ஷம் வில்வம் கோலம்.RUDHRAKSHA VILVAM KOLAM

காரைக்குடிப் பக்கங்களில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கவுடு எனப்படும் ருத்ராக்ஷத்தை அணிந்திருப்பார்கள். ருத்ராக்ஷத்தில் ஒரு முகத்திலிருந்து 6 முகம் வரை உண்டு. ஒரு முகம் ரொம்ப விசேஷம்.

இதில் தங்கம் வெள்ளி ஏதேனும் பிடித்து சிவப்புக் கயிற்றில் கழுத்தில் சங்குக்குக் கீழே வரும்படி அணிந்திருப்பார்கள்.

இதிலிருந்து தண்ணீர் பட்டு உடலில் சேர்ந்தால் நன்மை என்ற ஐதீகம்.

நோய் நொடி எதுவும் அண்டாமல் கண்டத்தைக் காப்பதால் இதற்குக் கவுடு என்று பெயர்.

வில்வம் சிவனுக்கு உகந்த பத்ரம். இவை இரண்டையும் இணைத்து இந்தக் கோலத்தைப் போட்டுள்ளேன்.

நேர்ப்புள்ளி 12 புள்ளி 12 வரிசை. 

சூரிய நமஸ்காரக் கோலம். SURYA NAMASKARAM KOLAM

ஆதித்தனே அனைத்துக்கும் ஆதாரம்.

இவரை நமஸ்கரித்தால் தேஜஸ் கூடும். கண்ணில் ஒளி பெருகும்.

எனவே இந்தக் கோலம். ஒற்றைச் சூரியன் தானே என நினைக்கலாம். ஒவ்வொர் பிரபஞ்சத்திலும் ஒவ்வொரு சூரியன் உண்டு.. எனவே இங்கே 4 சூரியன்கள்.

இடைப்புள்ளி 16 - 13, 6 ,5,4.

ஆதித்யஹ்ருதயம் சொல்லிக் கொண்டே இந்தக் கோலத்தைப் போடலாம்.

வெள்ளி, 19 ஏப்ரல், 2013

சித்திரைப் பொங்கல் கோலம் . CHITHIRAI PONGKAL KOLAM

சித்திரைப் பொங்கல்:-

சித்திரை மாதம் அம்மன் கோயில்களில் பொங்கலிடுவார்கள். காரைக்குடி முத்தாளம்மன் கோயிலில் உலகின் எந்த ஊரிலும் இருக்கும் நகரத்தார்களும் வந்து பொங்கலிட்டு சாமியை வணங்கிச் செல்வார்கள். இங்கே கரும்புக் கட்டையில் பிள்ளைகளைத் தொட்டில் கட்டி வேண்டுதல் நிறைவேற்றுவார்கள். முடி இறக்குதல், மாவிளக்குப் போடுதல் என்றும் , உரு வாங்கிப் போடுதல் என்றும் கோலாகலமாகக் கொண்டாடப்படும் திருவிழா இது.

சித்திரையின் முக்கனிகள். THREE FRUITS KOLAM

சித்திரையின் முக்கனிகள் :-

சித்திரை மாதம் என்றாலே மாம்பழம், பலாப்பழம் ஞாபகம் வந்துவிடும். வாழை எப்போதும் கிடைக்கக் கூடியதுதான். இவை மூன்றையும் சித்திரை மாத விசேஷங்களிலும் வைகாசி மாதம் நடக்கும் திருமணங்களிலும் பரிமாறக் காணலாம்.

சித்திரா பௌர்ணமி சித்திர குப்தன் கோலம். :- CHITHRA PAURNAMI, CHITHRA GUPTHAN KOLAM

சித்திரா பௌர்ணமிக் கோலம். :-

சித்திரா பௌர்ணமியன்று சித்திரகுப்தன் கதை படிக்கப்பட்டு ஏடும் எழுத்தாணியும் பூஜை செய்யப்பட்டு, நீர் மோர், பானகம், விசிறி எல்லாம் வழங்கப்படும். சித்திர குப்தன் நாம் செய்தவற்றை எல்லாம் ஏட்டில் எழுதி வைப்பார். அது நம் இறப்புக்குப் பின் மேலோகத்தில் யமனின் சபையில் படிக்கப்பட்டு அதன் பலாபலனுக்கு ஏற்ப சொர்க்கமோ நரகமோ அடைவோம் என்பது ஐதீகம்.

இந்த வருடம் சித்திரா பௌர்ணமி ஏப்ரல் 25 வருகிறது.

இதில் நான் மதுரை மீனாக்ஷி அம்மனையும் கோயில் கோபுரம், மேகங்கள் தென்னங்கீற்று நடுவில் ஒளிவிடும் பௌர்ணமி நிலவையும் வரைந்துள்ளேன்.

புதன், 17 ஏப்ரல், 2013

நேர்ப்புள்ளி நெளிக்கோலங்கள் - 6 NELI KOLAM

நேர்ப்புள்ளி நெளிக்கோலங்களில் இது கொஞ்சம் வித்யாசம்.

ரொம்ப நெளி நெளியாகப் போடாமல் இண்டூ இண்டூவாக இணைத்தால் போதும்.

நேர்ப் புள்ளி 10 புள்ளி 10 வரிசை.

இந்தக் கோலம் ஜனவரி 15 - 31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

கண் திருஷ்டிக் கோலம். KAN THRISHTI KOLAM

கண் திருஷ்டி படாமலிருக்க இந்தக் கோலம் போடுவார்கள்.

இது நேர்ப்புள்ளி 23 - 1.

இந்தக் கோலம் ஜனவரி 15 - 31. 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

தாமரைத் தண்டுக் கோலம். LOTUS STEM KOLAM

தாமரைத் தண்டுக் கோலம்.

தாமரைத் தண்டுகள் நீரில் முறுக்கிக் கொடி கொடியாய் சுற்றிக் கிடக்கும். எனவே இந்தக் கோலத்துக்கு இந்தப் பெயர்.

இடைப்புள்ளி 21 - 8 வரை.

இந்தக் கோலம் ஜனவரி 16 - 31. 2013 , குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

நீர்த்தாமரைக்கோலம். LOTUS KOLAM

நீர்த்தாமரைக் கோலம்.

குளத்தில் இருக்கும் தாமரைகள் ஒன்றோடொன்று கோர்த்தது போல இருப்பதால் இந்தக் கோலத்துக்கு இந்தப் பெயர்.

இது 19 புள்ளி 10 வரை. இடைப்புள்ளி.

இந்தக் கோலம் ஜனவரி 16 - 31 பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

திங்கள், 15 ஏப்ரல், 2013

டைமன் வடிவக் கோலம் DIAMOND SHAPE KOLAM

இது டைமன் வடிவத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இது ஜனவரி 15 - 31 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்துள்ளது.


மெழுகுவர்த்தி கோலம் CANDLE LIGHT KOLAM

மெழுகுவர்த்திக் கோலம்.

இது இடைப் புள்ளி 15 - 8 வரை வைத்துப் போட வேண்டும்.

இது ஜனவரி 16 - 31 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

செவ்வாய், 2 ஏப்ரல், 2013

சங்கு, சக்கரம், நாமம், வேல் கோலம். SANGU CHAKRA NAMAM VEL KOLAM

சங்கு

சக்கரம்,

வேல் மற்றும் நாமம் . இது அடுப்படி மேடையில் போடப்பட்டது.

ஹ்ருதய ( இதய ) கமலம் கோலம். HIRUTHAYA KAMALAM KOLAM

இதன் பெயர் இதய கமலக் கோலம்.

நடுவில் எட்டுப் புள்ளிகள் வைத்து அதன் தொடர்ச்சியாக எட்டுத் திசைகளிலும் மொத்தம் 5 புள்ளிகள் வைத்து 1, 3, 5, 2, 4, 1 , என்ற வரிசையில் இணைத்து வரவும்.

ஐஸ்வர்யக் கோலம். AISHWARYA KOLAM

இதன் பெயர் ஐஸ்வர்யக் கோலம்.

நடுவில் 7 புள்ளி, அதன் இரு பக்கங்களிலும் 8,  7, 6 ,  3 எனப் புள்ளி வைத்து  நடுப்புள்ளியை விட்டு விட்டு கோடுகளை உடுக்கை ஷேப்பில் இணைக்கவும்.

நட்ட நடுவில் வரும் ஓரப் புள்ளிகளை சம பக்க முக்கோணமாக இணைக்கவும்.

மாக்கோலத்தில் தாமரை. LOTUS IN MAKKOLAM

மாக்கோலத்தில் தாமரை.

இது அடுப்படி மேடையில் வரையப்பட்டது.

மாக்கோலத்தில் யானை.. ELEPHANT IN MAKKOLAM

இது  பச்சரிசி மாவை ஊறவைத்து அரைத்துப் போடப்பட்ட கோலம்.

இது 7 புள்ளி  6 வரிசை வைத்துப் போட வேண்டும்.
Related Posts Plugin for WordPress, Blogger...