எனது நூல்கள்

எனது நூல்கள்
எனது நூல்கள்

புதன், 27 பிப்ரவரி, 2013

குத்துவிளக்குக் கோலம். KUTHU VILAKKU KOLAM

வெள்ளிக் கிழமைகளில் குத்துவிளக்குக் கோலம் போடுவோம். இது புள்ளி வைச்சுப் போடப்பட்ட குத்து விளக்கு.

நேர்ப் புள்ளி. 23,

பீடம் 15 - 3 வரிசை.

விளக்கு 15,13, 9,5 , 1 இல் நிறுத்தவும்.

இது டிசம்பர் 15 - 31 , 2012 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.Read more: http://www.mylivesignature.com/mls_wizard2_1.php?sid=54488-89-72B745B7DCD91A6D51CF5145CF29EE5F#ixzz0gZnBC9oU

செவ்வாய், 26 பிப்ரவரி, 2013

மீன் , கத்திரிக்காய் கோலம். FISH & BRINJAL KOLAM

மீன் , கத்திரிக்காய் போட்டு குழம்பு வைப்பாங்க. இதுல கோலம் போட்டு இருக்கோம் இங்கே.

நடுவுல தாமரை, பந்தும் வருது.  நேர்ப் புள்ளி பதினாலு புள்ளி , பதினாலு வரிசை.

இந்தக் கோலம் டிசம்பர் 15- 31 , 2012 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

புதன், 20 பிப்ரவரி, 2013

நேர்ப்புள்ளி நெளிக் கோலங்கள். 1,2 ( NELI KOLAM )

நேர்ப்புள்ளிக் கோலங்கள் வரைவது எளிது.


கொஞ்சம் சிக்கலாய் இருப்பது போல் தோன்றினாலும் ஒவ்வொரு பகுதியாக போட்டுக் கொண்டே வந்து நடுவில் இணைத்தால் சரியாக வரும். நடுப் புள்ளியை மட்டும் சிறிது பெரிதாக வைத்துக் கொண்டால் போடுவது எளிது.

முதல் கோலம்15 புள்ளி  5 வரிசை,  5 புள்ளி - 5வரிசை.

இரண்டாவது கோலம் 17 - 1.

இவை இரண்டும் டிசம்பர் 15- 31 , 2012 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.


ஜனவரி 15 - 31 பக்தி ஸ்பெஷலிலும் வெளிவந்துள்ளது முதல் கோலம்.

முதல்நாள்  பேப்பரில் வரைந்து பார்த்துவிட்டு கோலமிடத் துவங்குங்கள். 


செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

சங்குக் கோலம். SANGU KOLAM

சங்குக் கோலம்

15 புள்ளி இடை புள்ளி 8 ல நிறுத்தணும்.

இது டிசம்பர் 15 - 31 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது. 

வெள்ளி, 8 பிப்ரவரி, 2013

விநாயகர் கோலம். VINAYAGAR KOLAM

விநாயகர் கோலம்.


நாம புதுசா எதை ஆரம்பிச்சாலும் பிள்ளையார் சுழி போட்டு தும்பிக்கையானைத் துதித்துத்தானே ஆரம்பிப்போம். எனவே விக்னங்களை அகற்றும் விநாயகனை வணங்கி இந்தக் கோலங்கள் வலைப்பூவைத் தொடங்குகிறேன்.

15 புள்ளி, 15 வரிசை. விநாயகரும் மோதகமும் இந்தக் கோலத்துல வரைஞ்சிருக்கேன்.

இந்த விநாயகர் கோலம் குமுதம் பக்தி ஸ்பெஷலில் முதன் முதலில் வெளிவந்தது. எனவே குமுதம் பக்தி ஸ்பெஷலுக்கும் நன்றி. :)
Related Posts Plugin for WordPress, Blogger...