எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மார்ச், 2013

நடுவீட்டுக் கோலம். NADU VEETU KOLAM. WEDDING KOLAMS.

செட்டிநாட்டுத் திருமணங்களில்  தும்பு பிடித்ததும் நடுவீட்டில் கோலமிடத் துவங்குவார்கள். பொங்கல், பிள்ளையார் நோன்பு, திருமணம் , திருமணத்துக்கு அழைத்தல் போன்ற முக்கிய நிகழ்வுகளின்போது இந்தக் கோலங்கள் போடப்படும்.

கார்த்திகை மாத பூசை வீடுகளிலும் இந்தக் கோலங்கள் இடுவார்கள். காவடி பூசை, திருவாசகம் முற்றோதல் போன்ற ஆன்மீக நிகழ்வுகளிலும்  விளையாட்டுப் பொட்டி வேவு, சடங்கு கழித்தல் போன்ற வீட்டு நிகழ்வுகளிலும் இது கட்டாயம் போடப்படும்.

கோலக்கூட்டைத் தண்ணீரில் கரைத்து காட்டன் துணியை அதில் முக்கி எடுத்து மோதிர விரலால் போட வேண்டும். இந்தக் கோலங்களில் வெளிப்பக்கம் இரட்டைப் புள்ளிகள் வைக்கப்படும்.

இது என் மாமா பெண் புடவையின் தலைப்பில் பின்னிய நடுவீட்டுக் கோலம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...