எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மார்ச், 2013

தும்பு பிடித்தல். THUMBU PIDITHAL KOLAM. ( WEDDING KOLAMS )

காரைக்குடிப் பக்கம் பிள்ளையார் நோன்பு, திருமணம்  போன்ற சுபநிகழ்வுகளின் போது கோலமிடத்துவங்குமுன் சாமி அறையில் தும்பு பிடிப்பார்கள்.

இதற்கு ஏடு கட்டியிருக்கும் கயிற்றை கோலமாவில் நனைத்து சுவற்றில் சதுரமாகவும் அதனுள்ளே எக்ஸ் வடிவிலும் பின் கோபுரமாகவும் கோலமாவில் வரைவார்கள்.

ஒருவர் ஏடைப் பிரித்து அதைச் சுற்றிய கயிற்றைக் கோலமாவில் நனைத்து சுவற்றில் வைக்க அதை ட்வைன் நூலை இழுத்து அடிப்பது போல இன்னொருவர் செய்வார். அந்தக் கயிற்றில் இருக்கும் கோலமாவு சுவற்றில் கோடாகப் பதியும்.

நாலு பக்கமும் அடித்து நடுவில் இண்டூ போல அடித்து  மேலே கோபுரம் போல
உருவாக்குவார்கள் . குழந்தைகள் வரைந்த குட்டி சைஸ் வீடு போல இருக்கும் அது.

குடும்பம் கட்டுக் கோப்பாக வாழ்ந்து கோபுரம் போல உயரவேண்டும் என்ற தத்துவமாக இருக்கலாம்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...