எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மார்ச், 2013

நிலை வாசல் கோலம். NILAI VASAL KOLAM. WEDDING KOLAMS.

நடுவீட்டுக் கோலம் போன்றே போடப்படும் கோலம் இது. திருமணம் சமயங்களில் இங்கே  மாப்பிளையை அழைத்தவுடன் இங்கே நிற்க வைத்து மாப்பிள்ளைக்கு ஸ்லேட்டு விளக்கு வைத்து ஆலாத்தி எடுத்து அழைப்பார்கள்.

பின்பு இங்கே இருந்து நடுவீட்டுக்குள் வேவு எடுப்பார்கள். இங்கேயிருந்துதான் பெண்ணுக்கும் ஆலாத்தி எடுத்து பெண் அழைப்புக்கு மாப்பிள்ளை வீட்டுக்கு அனுப்புவார்கள்.

வீட்டின் உள் நடையில் வரையப்படும் கோலம் இது. கிட்டத்தட்ட பட்டாலையை ஒட்டிய பத்தி நடையில் இடுவார்கள். சட்டங்கள் வைத்து ஓரங்களை சரியாக சதுரமாக வரைந்து உள்ளே டிசைன்கள் வரைவார்கள். நான்கு பக்கமும் கோபுரங்கள். கிட்டத்தட்ட தேர் போன்ற அமைப்பு. நான்கு மூலைகளிலும் கால்கள். அதன் பக்கங்களில் வாழைத் தோரணங்கள் போன்ற டிசைன்.

இந்தக் கோலத்தின் வெளிப்பக்கத்தில் ஸ்லேட்டு விளக்கும் சங்கும் போட்டிருக்கின்றார்கள்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

Related Posts Plugin for WordPress, Blogger...