எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 3 மார்ச், 2013

பாப்பாரக் கோலம். PAPARAK KOLAM

பாப்பாரக் கோலம்.

காரைக்குடியில் கணபதி ஹோமத்துக்குப் போடுவார்கள். இதன் மேல் செங்கல் அடுக்கி மண் கொட்டி ஹோமம் செய்வார்கள்.

பிள்ளை பிறந்தால், மகள் சமைந்தால், திருமணமான பெண் முதல் தீட்டானால் இந்தக் கோலத்தைப் போடுவார்கள்.

பிள்ளை பிறந்தால் இதில் தடுக்குப் போட்டு நிற்க வைத்து அழைப்பார்கள். மகள் சமைந்தால், திருமணமான பெண் முதல் தீட்டானால் இதில்  தடுக்குப் போட்டு நிற்க வைத்து சடங்கு செய்வார்கள்.

திருமணங்களிலும் போடப்படும்.

பொதுவாக நடுவீட்டுக் கோலத்தின் முன் போடப்படுவது இந்தக் கோலம். 


வெள்ளி, 1 மார்ச், 2013

நெய்வேலியில் ரங்கோலி RANGOLI AT NEYVELI

நெய்வேலியில் ஒரு தங்கநகை மாளிகைக்காரர்கள் இந்த ரங்கோலிப் போட்டி நடத்தினார்கள்.

அதில் பங்குபெற்றுப் போட்ட கோலம் இது.. பரிசு எதுவுமில்லை.

ஒரு பெண் வரைந்திருந்த நடராஜர் ரங்கோலிக்கு முதல் பரிசு கிடைத்தது.:)


GRAIN CARPET. பயறு, பருப்பில் டிசைன் கோலம். KOLA WITH GRAINS,

இதன் பெயர் GRAIN CARPET..

பயறு, பருப்பு வகைகளைக் கொண்டு போடப்பட்ட கோலம் இது.

ஃபைன் ஆர்ட்ஸ் காம்பெடிஷன்களில் நமக்கு ஒன்றரை அடிக்கு ஒன்றரை அடி  அல்லது இரண்டுக்கு இரண்டு என்ற அளவில்  வரையறை தருவார்கள். அந்த அளவுக்குள் நாம் டிசைன் தேர்ந்தெடுத்து வரைந்து அதைப் பயறு, பருப்பு வகைகளால் நிரப்ப வேண்டும்.

இதில் மைசூர் தால், வெள்ளை உளுந்து,   பாசிப்பயறு, கருப்பு உளுந்து பயன்படுத்தப்பட்டுள்ளது.

ரங்கோலியில் கதக்களி.. KATHAKALI IN RANGOLI

கல்லூரியில் ஃபைன் ஆர்ட்ஸ் காம்பெடிஷன்களில் ரங்கோலி, மாக்கோலம், பொடிக்கோலம் எல்லாம் உண்டு.

எங்கள் வேதியல் இரண்டாம் வருடத்தில் நாங்கள் வரைந்த கதக்களி ரங்கோலி இது.

இதற்கு இரண்டாம் பரிசு கிடைத்தது. :)

ஃபாத்திமா காலேஜ் லாபியில் மாக்கோலம். MAKKOLAM AT FATIMA COLLEGE LOBBY

கல்லூரிப் பருவத்தில் அனுராதா மேடம் கோலத்தைப் பற்றி ஆராய்ச்சி செய்தார்கள்.  எனவே எந்த நிகழ்ச்சி என்றாலும் அவர்கள்தான் லாபியில் வரவேற்புக் கோலத்துக்கான பொறுப்பில் இருப்பார்கள்.

அவர்கள் சொல்லும் முறைப்படி நட்டநடுவில் பெரிய கோலங்கள் வரைவோம். அதில் எங்கள் எண்ணப்படி எங்கள் கைவண்ணத்தையும் காண்பிக்க அனுமதிப்பார் மேடம்.

இது லாபியில் போட்ட மாக்கோலம் . காவி பார்டர் போட்டு அழகு செய்திருக்கிறோம்.


Related Posts Plugin for WordPress, Blogger...