எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 11 மார்ச், 2013

சிவபூஜை கோலம். SIVA POOJA KOLAM

”பால் நினைந்தூட்டும் தாயினம் சாலப் பரிந்து
பாவியேனுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி
உவப்பிலா ஆனந்த மயமான தேனினைச் சொரிந்து
புறம்புறந்திரிந்த செல்வமே சிவபெருமானே
யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன்
இங்கெழுந்தருள்வது இனியே.. ”

சிவன் ராத்திரி அன்று சிவனைத் துதிக்க இந்தப் பாடலும் மேலும் இந்தக் கோலமும் வரைந்தேன்.

இது குமுதம் பக்தி ஸ்பெஷலில் மார்ச் 1 - 15 , 2013 இதழில் வெளிவந்தது.

சிவன் நிஷ்டைக் கோலம். சிவராத்ரி ஸ்பெஷல். SIVAN NISHTAI KOLAM

சிவன் ராத்திரிக்காக போடப்பட்ட சிறப்புக் கோலங்கள் இவை.

வில்வமரத்தின் அடியில் சிவன் நிஷ்டை செய்யும் கோலம் இது.

“ கல்லாலின் புடை அமர்ந்து “ என்ற பாடலில் வருவதற்கேற்ப வரைந்துள்ளேன்.

இது குமுதம் பக்தி ஸ்பெஷலில் மார்ச் 1 - 15  2013. இதழில் வெளிவந்துள்ளன.

வெள்ளி, 8 மார்ச், 2013

தாமரைக் கோலம். LOTUS KOLAM

தாமரைப் பூக்கள்தான் கோலங்களிலேயே அதிகம் எளிதாக வரைய முடியும். கைகளுக்கு நெளிவு வளைவு பழக வேண்டுமென்றால் தாமரைப்பூக் கோலங்களை வரைந்து பழகலாம்.

இந்தக் கோலம் நேர்ப்புள்ளி 19-1 வரை வைத்து வரைந்தது.

இது டிசம்பர் 15-31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

நேர்ப்புள்ளி நெளிக்கோலங்கள் - 3 NELI KOLAM,

நேர்ப்புள்ளி நெளிக்கோலங்கள் பல வகைப்படும். இந்தக் கோலம் 15 புள்ளி 15 வரிசை வைத்தும் போடலாம். 7 புள்ளி 7 வரிசை வைத்து பின் நடுவில் ஒரு வரிசை இணைத்தும் போடலாம்.

நெளிகளை இணைக்கும்போது ஒரேமாதிரி எஸ் , மற்றும் வி ஷேப்பில் கொண்டு வந்தால் இணைப்பது சுலபம்.

இந்தக் கோலம் டிசம்பர் 15 - 31, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தது.

திங்கள், 4 மார்ச், 2013

பூஜை அறையில் நவக்கிரக/கிழமைக் கோலங்கள். NAVAGRAHA KOLAM

பூஜை அறையில் கிழமை வாரியாகப் போடப்படும் கோலங்கள் உண்டு.

ஒவ்வொரு சாமிக்கும் போடப்படும் ஒவ்வொரு ப்ரத்யேகக் கோலமும் யந்திரங்கள் என்று சொல்லப்படுகின்றன.

இவை அந்தக் குறிப்பிட்ட வடிவமைப்புக்களில் அதற்கான சக்தியைத் தாங்கி இருக்கின்றன.

கிழமை வாரியாகவும்,  நவக்கிரகங்கள் வாரியாகவும் போடக்கூடிய கோலங்கள் இவை.

ஒவ்வொரு நாளும் சாமிஅறையில் போட்டு வணங்கி மகிழத்தக்கவை.

இவை ஜனவரி 1-15, 2013 குமுதம் பக்தி ஸ்பெஷலில் வெளிவந்தவை.
Related Posts Plugin for WordPress, Blogger...